news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய விமானப்படை தினம் - சல்யூட்
tv

Also Watch

இந்திய விமானப்படை தினம் - சல்யூட்

93ஆவது இந்திய விமானப்படை தினம்

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
airforce day

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் ஒன்றான விமானப் படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. இதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 93வது விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாள், விமானப்படையின் மைல்கல் பணிகளையும், வான்வழித் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய சிறப்பையும் அங்கீகரிக்கிறது.

இதுகுறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில், பார்க்கலாம்.

கடந்த 1932ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் துணை படையாக, ‘ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்’ என்ற பெயரில் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. முதலில் வெறும் 25 வீரர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படையில் தற்போது 1,35,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்று பார்த்தால், இந்திய விமானப்படை பங்கெடுத்த முதல் போர் இந்தியாவுக்காக நடந்ததில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் 1939ஆம் ஆண்டு, 2ஆம் உலகப் போரின் போது, நேச நாட்டுப் படைகளுக்காக இங்கிலாந்து சார்பில், இந்திய விமானப்படை பங்கேற்றது.

பர்மாவில் இருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறி வருவதை தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாக செயலாற்றியது, வரலாற்றில் என்றென்றும் பேசப்படக்கூடிய ஒன்றாகும்.

முதன்முதலில், வெறும் 6 போர் விமானங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது இரண்டாயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. ரஃபேல், மிராஜ் 2000, தேஜஸ், ஜாகுவார், சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருக்கின்றன. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்து இந்திய விமானப்படை உலகில் நான்காவது வலிமையான படையாகும்.

கடந்த 1950ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்திய விமானப்படை பாகிஸ்தானுடன் 4 முக்கிய போர்களிலும், சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது.

ஆப்ரேஷன் விஜய், ஆப்ரேஷன் மேக்தூத், ஆப்ரேஷன் கேக்டஸ், ஆப்ரேஷன் பூமாலை உள்ளிட்ட முக்கிய வான்வெளி ஆப்ரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்தியிருக்கிறது. அண்மையில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை உலகளவில் பேசுபொருளானது.

இந்திய விமானப்படையில், பறக்கும் கிளை, தொழில்நுட்பக்கிளை மற்றும் நிலவழிக் கிளை எனும் மூன்று சேவைக் கிளைகள் இருக்கின்றன. பறக்கும் கிளையின் வழியாகப் பறத்தல் பணிகளும், தொழில்நுட்ப கிளை வழியாகப் பொறியியல் பணிகளும், நிலவழிக் கிளை வழியாக, தளவாடங்கள், நிர்வாகம், கணக்குகள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர் தவிர இயற்கை பேரழிவுகளின் போது, மக்களை மீட்கும் பணியிலும் இந்திய விமானப்படை ஈடுபட்டு வருகிறது.

இதுமட்டுமில்லாமல் ஐ.நா.வின் அமைதிப்படையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நன்நாளில் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக போராடி கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்திய விமானப்படை வீரருக்கும் நம் நன்றிகளை தெரிவிப்போம்... ஒரு ராயல் சல்யூட்... 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved