news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஃப்ளைதுபாய் விமான கடத்தலை தடுத்த இந்திய விமானி
tv

Also Watch

ஃப்ளைதுபாய் விமான கடத்தலை தடுத்த இந்திய விமானி

174 பயணிகளின் உயிரையும் காப்பாற்றிய ஸ்மித் மச்சார்

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஃப்ளைதுபாய் விமான கடத்தலை தடுத்த இந்திய விமானி

நடுவானில் விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட மோதலின்போது, ​​துணை விமானியின் நாசவேலை முயற்சியை முறியடித்த ஃப்ளைதுபாய் விமானத்தின் நாயகன் ஒரு இந்திய விமானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கத்திக்குத்தில் காயமடைந்த நிலையிலும் போராடி மீட்டார்
விமானத்தின் அமைப்புகளை நாசப்படுத்த முயன்றதை கேப்டன் ஸ்மித் மச்சார் எதிர்த்து போராடியுள்ளார். அப்போது, ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி அவரை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த நிலையிலும், துபாய் டெல் அவிவ் விமானத்தில் இருந்த 174 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். அவரை பயணிகள் ஒரு நாயகனாக புகழ்ந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

"கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசாத்திய வீரத்திற்கு எனது சல்யூட்"
நாசவேலை முயற்சியில் இருந்து ஃப்ளைதுபாய் விமானத்தை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வானளாவ புகழ்ந்துள்ளார். இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசாத்திய வீரத்திற்கு தனது சல்யூட் என நெகிழ்ந்துள்ளார்.

பெரும் பேரழிவை தடுத்ததாக புகழாரம்
கத்திகுத்துக்கு ஆளாகி, பலத்த காயமடைந்த நிலையிலும், எதிர்த்து போராடி நடுவானில் நிகழவிருந்த ஒரு பெரும் பேரழிவை தடுத்ததாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலியர்கள் உட்பட 174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அவர் ஒரு உண்மையான ஹீரோ எனவும், அவர் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கண்ணீரோடு வரவேற்ற உறவினர்கள்
பிளைதுபாய் விமானத்தில் தாயகம் திரும்பிய இஸ்ரேல் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பென் குரியன் விமான நிலையத்தில் பயணிகளை கட்டித் தழுவி கண்ணீர் விட்ட உறவினர்களால், விமான நிலையமே நெகிழ்ந்தது.

விமான சம்பவம்- நெதன்யாகுவுடன் டிரம்ப் பேச்சு
பிளை துபாய் விமானத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமரிடம் தொலைபேசியில் பேசியதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். துணை விமானி பயங்கரவாதியாக இருக்கலாம் என விமர்சித்த டிரம்ப், இந்திய விமானிக்கு பாராட்டு தெரிவித்து, புகழாரம் சூட்டி உள்ளார்.

"பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த விமானி"
பிளை துபாய் விமானத்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த மச்சாருக்கு, இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
FZ1073 விமானத்தின் துணிச்சலான இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மிகவும் அசாதாரணமான மற்றும் சவாலான சூழலில் காயமடைந்த போதிலும், கேப்டன் மச்சார் அபாரமான துணிச்சல், நிதானம் மற்றும் கடமை உணர்வை வெளிப்படுத்தி, விமானத்தில் இருந்த அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தார். கேப்டன் மச்சார் விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; அதற்காகப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

விமானியின் உடல்நிலை சீராக உள்ளது
இந்த நிலையில், படுகாயமடைந்த விமானிக்கு, சவூதியின் தபூக் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிளைதுபாய் விமானி ஸ்மித் மச்சார் உடல்நிலை சீராக இருப்பதாக சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

Related Link
ஒரே நாளில் 3 தங்கம், இந்திய வீரர்கள் அசத்தல்

ஒரே நாளில் 3 தங்கம், இந்திய வீரர்கள் அசத்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடத்த முயற்சியா? கவிழ்க்க சதியா? பிளைதுபாய் விமானத்தில் நடந்தது என்ன?

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved