news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட், பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி
tv

Also Watch

tv

Read this

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட், பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி

வலுவான இந்திய அணி

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஜூன் 14ஆம் தேதி, பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி, உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்து உள்ளது.

இந்திய அணிக்கே வாய்ப்பு
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6வது லீக் சுற்று போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் 90 சதவீதம் இந்திய அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, மற்றொரு ஆட்டத்தில் பங்களாதேஷ், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், 73 சதவீதம் பங்களாதேஷ் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான்
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, இந்த டி20 உலகக் கோப்பை தொடரையும் வெற்றியோடு தொடங்க தயாராகி வருகிறது.

இரு அணிகள் இதுவரை...
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் இதுவரை மோதியுள்ள போட்டிகளைப் பார்க்கும்போது இந்திய அணியின் பலமே ஓங்கி உள்ளது. இதுவரை இரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்தியா 13 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2024 - டி20 உலகக் கோப்பையில் துபாயில் நடந்த மோதலில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வலுவான இந்திய அணி
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கி அதிரடி காட்டக் காத்திருக்கின்றனர். இந்திய அணியில் காயம் காரணமாக அமன்ஜோத் கவுர் மற்றும் காஷ்வி கவுதம் ஆகியோர் விளையாடாதது சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கவனம் பெற்ற பாத்திமா சனா
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த ஒரு ஆண்டில் பேட்டிங்கில் 50க்கும் மேல் சராசரியும், பந்து வீச்சில் 25க்கும் கீழ் சராசரியும் கொண்டு ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். இவர், கராச்சியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பதால், பாத்திமா சனாவை வீழ்த்த இந்திய அணி சிறப்பான உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும்.

இரவு 7 மணிக்கு...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டாஸ் போடும் நிகழ்வு மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.

இப்போட்டியை தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம். மொபைல் மற்றும் இணையதளத்தில் நேரலையாகப் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

Related Link
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.370 பிரியாணி சர்ச்சை - ஸ்டாண்ட் அப் காமெடியன் மன்னிப்பு

0
27 mins agoshare
பிரியாணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved