Also Watch
Read this

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி 84 ரன்கள் குவிப்பு
தர்மசாலாவில் நடைபெற்ற போட்டி மழையால் தடைபட்டதால் ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 24.5 ஓவரில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி வீரர் குர்பாஸ் 51 பந்தில், 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 22.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் குவித்து வெற்றி பெற்றது. கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி 84 ரன்கள் குவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் 2 சாதனை
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக, 16 ரன்கள் அடித்த ரோகித் சர்மா, 2 புதிய சாதனைகளை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 384 போட்டிகளில் களமிறங்கி 16 ஆயிரம் ரன்களை கடந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சாதனையை முறியடித்துள்ளார்.

அதிக சர்வதேச போட்டிகளில் ராகுல் டிராவிட் சாதனை சமன்
அதேபோல, 509ஆவது சர்வதேச போட்டியில் விளாயாடியதன் மூலம் இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் 664 போட்டிகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 559 போட்டிகளுடன் 2-வது இடத்திலும், தோனி 538 போட்டிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved