news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அரசு வழக்கறிஞர் பதவி ரூ.15 லட்சமா?
tv

Also Watch

அரசு வழக்கறிஞர் பதவி ரூ.15 லட்சமா?

தவெக நிர்வாகி ஆடியோ லீக், நீதிமன்றம் அதிரடி

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கன்னியாகுமரி நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில், பதவியை விற்பனை செய்தது யார்? லஞ்சம் கொடுத்து வருபவர்கள் சட்டத்தைப் பாதுகாப்பார்களா? என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூலை மாதமே நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரசு வழக்கறிஞர் பணி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள இரணியல் மற்றும் தக்கலை நீதிமன்றங்களில் சுமார் 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒரு இளம்பெண் வழக்கறிஞருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், தவெக கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினரான அனீஸ்.
நல விசாரிப்புகளுக்கு பிறகு, விஷயத்திற்குள் புகுந்த அவர், ’நீங்க அரசு வழக்கறிஞராக ட்ரை பண்றீங்கன்னு தெரியும். நம்ம கட்சியில உறுப்பினரா இருந்தா மட்டுமே இதெல்லாம் செஞ்சு கொடுப்போம். ஆனா, கையில 15 லட்சம் இருக்கணும்,’ என்று ஓபனாகவே போட்டுடைத்தார்.

ரூ.2 லட்சம் தள்ளுபடி?
திடுக்கிட்ட அந்த இளம் வழக்கறிஞர், ’அவ்வளவு பெரிய தொகையெல்லாம் என்னிடம் இல்லை,’ என்று தயங்க, உடனே அனீஸ், ’சரி பொண்ணுங்கறதால 2 லட்சம் கம்மி பண்ணிக்கலாம். 12 லட்சம் கொடுங்க. ஆர்டர் கைக்கு வந்ததும் பணத்தை கொடுத்தா போதும், 10 நாள்ல போஸ்டிங் உங்க கையில்,’ என்று காய்களை நகர்த்தி உள்ளார்.

கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்
அனீஸின் இந்த அடுக்கடுக்கான பேரத்தை அந்த பெண் வழக்கறிஞர் அப்படியே போனில் ரெக்கார்ட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, ஆடியோ காட்டுத்தீயாக பரவியது. மற்றொரு வழக்கறிஞரான அகஸ்டின் என்பவரிடமும் இதேபோல பேரம் பேசப்பட்டதும், அவர் தற்போது அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு உள்ளதும் அம்பலமானது.

விஷயம் விஸ்வரூபம் எடுத்ததும், தவெகவின் கட்சிப் பொறுப்பிலிருந்து அனீஸ் அவசர அவசரமாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஜூலை மாதமே செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தில் வழக்கு
ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கை தொடுத்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கன்னியாகுமரி மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட பல லட்சங்கள் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும், எனவே, இந்த நியமனங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, புகார் குறித்து உரிய துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரியது.

விற்பனை செய்தது யார்?
வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், அரசு வழக்கறிஞர் பணியை விற்பனை செய்தது யார்? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில், ’தவெகவை சேர்ந்த அனீஸ் தான் இந்த தரகு வேலையை செய்தார்,’ என்று சுட்டிக்காட்டப்பட்டது. உடனே நீதிபதி, ’லஞ்சம் பெறப்பட்டது என்ற புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டும் ஏன் இன்னும் விசாரணை நடத்தவில்லை? புகார் வந்தால் விசாரிக்க மாட்டீர்களா? லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்,’ எனக்கூறி இரண்டு தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிரடி காட்டினார்.

சட்டத்தை பாதுகாப்பார்களா?
தொடர்ந்து, லஞ்சம் கொடுத்துவிட்டு இவர்கள் அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? இவர்கள் எல்லாம் நாட்டை காப்பாற்றுவார்களா? அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா? என்று காரசாரமாக கேள்விகளை முன்வைத்த நீதிபதி, இந்த மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போதிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை
சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டிய அரசு வழக்கறிஞர் பதவியை பல லட்சத்திற்கு ஏலம் பேச துணிந்தது, ஒட்டுமொத்த நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கே விழுந்த பலத்த அடியாக மாறியிருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அனீஸோடு நின்றுவிடுமா? அல்லது இதன் பின்னணியில் உள்ள பெரிய தலைகளையும் உருட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Link
ஆட்சிக்கும் கட்சிக்கும் முதல்வரின் சிறப்பு உளவுத்துறை

ஆட்சிக்கும் கட்சிக்கும் முதல்வரின் சிறப்பு உளவுத்துறை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஃபீனிக்ஸ் பறவைபோல் சிறகடிக்கும் நாளந்தா, கலாமின் கனவால் எழுந்த விருட்சம்

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved