news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சு
tv

Also Watch

tv

Read this

முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சு

அதிமுகவில் கருத்து வேறுபாடு

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் ஒரு தரப்பை முதல்வர் விஜய் ஆதரிப்பது ஏற்புடையதல்ல என்று சட்டப்பேரவையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

சட்டப்பேரவையில், தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது;
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. அதிமுக ஆட்சி உருவாகும் என நினைத்து தான் பொது மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனா், 47 தொகுதிகளில் வெற்றியும் பெற்றோம்.

தவெகவுக்கு வாக்களிக்கவில்லை
தோ்தலில் 66 சதவீதம் பேர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சா் பதவி கொடுப்பதாக ஆசை காட்டுவதாக தகவல் வருகிறது. பல பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறேன் என ஆசை வார்த்தைக்கூறி தவெகவிற்கு ஆதரவளிக்க செய்ததாக கூறப்படுகிறது. தூய்மையான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி நடத்துவேன் என்று கூறியுள்ளீா்கள், அதில் இருந்து மாறமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

ஆதரவு அளிக்கவில்லை
தமிழக வெற்றிக் கழக ஆட்சி தொடா்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவெக ஆட்சிக்கு எதிராக தான் வாக்களிப்பாா்கள்.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.

Related Link

"விஜய்க்கு ஆதரவு இல்லை" - பெரிய பெரிய அதிர்ச்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
44 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved