news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
tv

Also Watch

ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிறிய திரைப்படங்கள் வெற்றி

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மீண்டும் டைகர் முத்துவேல்பாண்டியன்
ஆயுத பூஜை, தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15 ஆம்தேதி, ஜெயிலர்-2 வெளியாகிறது. ரிலீஸ் தள்ளிப்போகும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திட்டமிட்டபடி படம் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் 'டைகர்' முத்துவேல் பாண்டியனாக களம் இறங்குகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் தங்களது முந்தைய கதாபாத்திரங்களிலேயே நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன், சூரஜ் வெஞ்சாரமூடு போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். 'ஜெயிலர்' முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

“சூப்பர் ஸ்டாரோட Big Fan”
’நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ‘தளபதி’ படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, எனது பெயரான ராமனை சூர்யா என மாற்றிக்கொண்டேன் என்றும், நடிகர் சூர்யா சினிமாவுக்கு வந்ததால், அந்தப் பெயரையும் மாற்றி ‘சூரி’ என்று வைத்துக்கொண்டேன் என்று நடிகர் சூரி கூறி உள்ளார். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து, கடும் போராட்டங்களுக்குப் பிறகு 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் 'பரோட்டா சூரி'யாகப் புகழ்பெற்றவர்,'விடுதலை', 'கொட்டுக்காளி' போன்ற திரைப்படங்கள் மூலம் முன்னணி கதாநாயகனாகவும் சூரி முத்திரை பதித்து வருகிறார்.

சிறிய திரைப்படங்கள் வெற்றி
முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு சென்ற பின்னர் திரையுலகம் நன்றாக உள்ளது. இந்த ஆண்டு சிறிய திரைப்படங்கள் அதிகமாக வெற்றி திரைப்படங்களாக திரையில் ஓடி உள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாக 'ஹாய்', 'யூத்' போன்ற படங்கள் உள்ளன என்று நடிகர் கார்த்தி கூறி உள்ளார்.

நடிகர் கார்த்தி, 'சர்தார் 2' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் திரையுலகின் தற்போதைய நிலை குறித்து பேசினார். அப்போது, முன்னணி நட்சத்திரங்கள் இல்லாதபோதும் நல்ல கதைகளுக்காக தியேட்டருக்கு ரசிகர்கள் வருகிறார்கள், இது ஆரோக்கியமான சினிமா சூழலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கார்த்தி தெரிவித்துள்ளார்.


Related Link
விக்ரம் பிரபு 26ல் கதாநாயகியாக அறிமுகமாகும் அமலா ஷாஜி

விக்ரம் பிரபு 26ல் கதாநாயகியாக அறிமுகமாகும் அமலா ஷாஜி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மமிதா பைஜூ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved