news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிற்பகலில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு
tv

Also Watch

tv

Read this

பிற்பகலில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்வு

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிற்பகலில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், மாலையில் ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,560க்கு விற்பனை ஆனது.
காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்த நிலையில், மாலையில் ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,320க்கு விற்பனை ஆனது.

ஜூலை 05
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 06
ஒரு சவரனுக்கு 1,120 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 07
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 08
ஒரு கிராமுக்கு 70 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மேலும் 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் மொத்தமாக ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் 5 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் விலை மாற்றமின்றி கிராம் 245 ரூபாய்க்கும் கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை 09 காலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 09 பிற்பகல்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், மாலையில் ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,560க்கு விற்பனை ஆனது.
காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்த நிலையில், மாலையில் ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,320க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 05 - ரூ.1,09,600
ஜூலை 06 - ரூ.1,08,480
ஜூலை 07 - ரூ.1,07,200
ஜூலை 08 - ரூ.1,06,000
ஜூலை 09 - ரூ.1,05,760 இன்று காலை
ஜூலை 09 - ரூ.1,06,560 இன்று பிற்பகல்

Related Link
கரூரில் 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்

கரூரில் 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேதமடைந்த கமேனியின் இல்லத்தின் வீடியோ வெளியீடு

0
12 mins agoshare
கமேனி இல்லம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau