Also Watch
Read this
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் பாடியுள்ள வெல்லும் படை இது என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் வெற்றிக்கு கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் என கமல் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

"வெல்லும் படை இது விலகிடு விலகிடு"
வெல்லும் படை இது விலகிடு விலகிடு என்ற பாடலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்டு உள்ளார். இந்த பாடலில் திமுக கூட்டணி கட்சிகளின் கொடி உடன் பிரச்சார பாடல் பாடப்பட்டு உள்ளது. தலைவன் இருக்கின்றான் என்ற பெயர் இந்த பாடலுக்கு சூட்டப்பட்டு உள்ளது.



நல்லவர் கேட்டிட நன்றே பரப்புங்கள்
இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூகவலை தள பக்கத்தில் கூறி இருப்பதாவது: "வெல்லும் படை இது விலகிடு விலகிடு" தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம், தலைவன் இருக்கின்றான், இனி உங்கள் வசம். நல்லவர் கேட்டிட நன்றே பரப்புங்கள்.



வீடாய், நாடாய், உலகாய் விரிந்திட வாழ்த்துதுமே
அறிவார்ந்த தமிழ்மக்கள் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது. அதன் விளைவுதான் தலைவன் இருக்கின்றான் என்ற பாடல். அதில் ஒரு வரி.
என்றும் தமிழகம் வென்றிட வேர்விட, விதையாய், செடியாய், மரமாய், காடாய், வீடாய், நாடாய், உலகாய் விரிந்திட வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் குரலில்...
"தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலை கமல்ஹாசனே பாடி, நடித்தும் உள்ளார். இந்த பாடலில் திமுக உள்பட கூட்டணி கட்சிகளின் கொடிகள், சேலத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் கலந்து கொண்ட பொதுக் கூட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன.