news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வண்டியை அறிவாலயத்துக்கு விடுங்க...
tv

Also Watch

tv

Read this

வண்டியை அறிவாலயத்துக்கு விடுங்க...

அதிரடி காட்டிய ஓபிஎஸ், மெகா ட்விஸ்ட்

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில், மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓ.பன்னீர்செல்வத்தை பூங்கொத்து கொடுத்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

மகனுடன் அறிவாலயம் வந்த ஓபிஎஸ்
ஓ.பி.எஸ். உடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் இருந்தனர்.

ஓபிஎஸ் கடந்து வந்த வரலாறு
அதிமுக கிளைச் செயலாளர் பதவியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பதவி வரை ஓபிஎஸ் வகித்துள்ளார். மூன்று முறை முதலமைச்சர், நிதியமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். சட்ட ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக இல்லாத நிலையில், இணைந்து ஓபிஎஸ் போட்டியிட்டார்.

அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவைத் தொடங்கினாலும், அதிமுகவில் மீண்டும் இணைய தயார் என்று வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். ஆனால் ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் தெரிவித்து விட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு தலைவர் டிடிவி தினகரனின் அமமுகவை தே.ஜ. கூட்டணியில் இணைக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டாலும், ஓபிஎஸ்ஸை சேர்க்க, இபிஎஸ் உறுதியாக மறுத்துவிட்டார்.


நெருங்கும் தேர்தல்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், கடந்த வாரமே சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். 
இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓபிஎஸ், திமுக உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஓபிஎஸ்-க்கு போடி தொகுதியும், அவருடன் இணைந்த அவரது ஆதரவாளர்கள் இருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
முடிவுக்கு வந்த ஓபிஎஸ்-ன் 'தர்ம யுத்தம்'

முடிவுக்கு வந்த ஓபிஎஸ்-ன் 'தர்ம யுத்தம்'


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
6 hrs 31 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved