news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் வருவோம், திட்டங்களை தொடர்வோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

மீண்டும் வருவோம், திட்டங்களை தொடர்வோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவை

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

Related Link
ஆப்ரேஷன் தேமுதிக, பாலில் விழுந்த பழம்

ஆப்ரேஷன் தேமுதிக, பாலில் விழுந்த பழம்


தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்து திட்டங்களைத் தொடர்வோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தனக்குத் தரப்பட்ட பணிகளை திறம்பட செய்து, எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
இடைக்கால நிதிநிலை அறிக்கை, கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், இன்று பிப்ரவரி 20ஆம் தேதி, காலை தொடங்கியது.
இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் உரையாற்றினார்கள்.
இதனிடையே, இடைக்கால நிதிநிலை அறிக்கை பதிலுரையில் முதல்வர் பேசியதாவது:
234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து செயலாற்றி உள்ளேன். என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு நன்றி. மிகப்பெரிய வாய்ப்பு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி.

வேகமாக பணிகளைத் தொடர்வோம்
அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்து, நிச்சயம் இன்னும் கூடுதலாக வேகமாக பணிகளைத் தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களைபோல எனக்கும் இருக்கிறது. எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச் சிறப்பாக செய்ததாகவே நான் உணர்கிறேன். தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பாக இருத்தல், ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இதனையே நானும் கடைபிடித்து இருக்கிறேன்.

திராவிட மாடல் 2.0 ஆட்சி
எங்களது சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். உறுதியாக மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்து, தமிழ் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம். அரசின் குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதனைகளுக்கு தோள் கொடுத்த தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.
இவ்வாறு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Related Link
கத்தியின்றி ரத்தமின்றி 4 முனை யுத்தம்

கத்தியின்றி ரத்தமின்றி 4 முனை யுத்தம்

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசில் கோலம் போடுங்கள் - விஜய் வேண்டுகோள்

6
16 mins agoshare
விஜய் வாக்குறுதிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved