கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் லக்கி பாஸ்கர் பட பாணியில் 7 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு நிறுவனங்களுக்கு கணக்கியல் சேவை வழங்கி வரும் எர்ன்ஸ்ட் அண்ட் யங் தனியார் நிறுவனத்தில் உதவி கணக்காளராக பணிபுரியும் ஸ்ரீகாந்த் என்பவருக்கு ஸ்விக்கி அலுவலகத்தின் மின்சார கட்டணத்தை தீர்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரையிலான வரவு செலவு குறித்து ஸ்விக்கி நிறுவனம் தணிக்கை செய்த போது, மின்கட்டணத்திற்காக கொடுத்த பணம் செலுத்தப்படவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து, அசோக்நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் 7 கோடி ரூபாயை சூதாட்டத்தில் முதலீடு செய்தது தெரியவந்தது.