Also Watch
Read this
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;
சுமார் 0.9 கி.மீ உயரத்தில், குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு உள் கர்நாடகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று அக்டோபர் 5ஆம் தேதியும், நாளை அக்டோபர் 6ஆம் தேதியும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், அதாவது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்...
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved