Also Watch
Read this
திமுகவை பொறுத்தவரை தோல்வியில் வெற்றி, தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி என்று, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து உள்ளார்.

இடைத்தேர்தல் முடிவு, கருத்து
இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், திமுகவைப் பொறுத்தவரை தோல்வியில் வெற்றி, தவெகவைப் பொறுத்தவரை வெற்றியிலும் தோல்வி.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

இடைத்தேர்தலில் திமுக
சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளின், இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved