Also Watch
Read this
வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சி குளிர பாராட்டு மழை பொழியவே வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத வெற்று பட்ஜெட் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
வறட்சி பற்றி பேசவில்லை
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டது தான் தமிழக வேளாண் பட்ஜெட். மற்றுமொரு பெயர் மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.
வெற்றி என்ற லேபிள்...
திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? குறுவை சாகுபடி பாதித்து, அரசின் உதவிக் கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா விவசாயிகளுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் பட்ஜெட் அமைந்து உள்ளது.
கூட்டத்தொடர் முழுவதும்...
விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் திமுக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved