வாரிசு அரசியலை தலையில் தாங்கும் காங்கிரஸ் கட்சி காலங்காலமாக அம்பேத்கரின்மரபை சிதைத்து பட்டியலின மக்களை இழிவுபடுத்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அம்பேத்கர் குறித்து அமித் ஷா அவமரியாதையாக பேசினார் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அது குறித்து தமது எக்ஸ் தளத்தில் மோடி பதிலளித்துள்ளார்.அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக இழிவுபடுத்தி வருவதாகவும், அதை மறைக்க காங்கிரஸ் தனது சீரழிந்த அரசியல் மூலம் பொய்களை பரப்பினால் அது எடுபடாது எனவும் மோடி காட்டமாக தெரிவித்துள்ளார். அம்பேத்கரை இழிவுபடுத்தும் காங்கிரசின் இருண்ட காலத்தை மட்டுமே அமித் ஷா தமது பேச்சில் அம்பலப்படுத்தியதாகவும் மோடி பதிவிட்டுள்ளார்.