Also Watch
Read this
கர்நாடகாவில், யாசகம் பெற்று வாழ்ந்து வந்த மூதாட்டி உயிரிழந்த பின் அவருடைய வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் இருந்த நிலையில், முறைப்படி சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே பணத்தை எண்ணும் வீடியோவை இணையவாசிகள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டி
கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி நூர். பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டி நூர், யாசகம் பெற்று வாழ்ந்து வந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் உடலை முறைப்படி அடக்கம் செய்தனர்.

மூதாட்டி வீட்டில்...
இரண்டு நாட்களுக்கு பின்னர், மூதாட்டி வாழ்ந்து வந்த வாடகை வீட்டிற்கு உறவினர்கள் நேரில் சென்று பார்த்த போது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்று சேர்த்த பணம், மூட்டைகளில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
30க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கட்டுக் கட்டமாக பணம் மற்றும் சில்லறைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை எண்ணி பார்த்த போது 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இருந்தது. மேலும் பணத்தை எண்ணிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

சகோதரர்களுக்கு கிடைத்த பணம்
பின்னர், அந்த பணத்தை முறைப்படி நூரின் சகோதரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. நூரின் சகோதரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில், வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved