news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news என் கூட யாராச்சும் சண்டைக்கு வாங்க...
tv

Also Watch

tv

Read this

என் கூட யாராச்சும் சண்டைக்கு வாங்க...

அபாயமானவரா கிம் ஜோங் உன்? பவர் என்ன?

55

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், சமூக வலை தளங்களில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறார்.

* ஏன் யாரும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்?

அணு ஆயுத தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அதற்கு கண்டனம் தெரிவிக்க, உக்ரைன் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன.
இதற்கு மத்தியில், அத்தனை வலிமை மிக்க ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு போருக்காக வடகொரிய அதிபர் காத்திருப்பதாகவும், இவரை ஏன் யாரும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? என்றும் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

* வட கொரிய அதிபர்...

அதாவது, நட்பு வட்டத்தில் எல்லா விளையாட்டுச் சாமான்களையும் வைத்திருக்கும் நண்பன் ஒருவனை யாரும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், அவன் ஆட்டத்திற்குள் வந்தால் யாராலும் விளையாட முடியாது என்றும் காமெடியாக பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள் பலர்.
இதில், உலகச் சிறந்த விளையாட்டுப் பொருட்கள் இருந்தும், யாரும் இவருடன் விளையாட விரும்புவதில்லை என்று தொடங்கி, யாராவது வடகொரியா மீது குண்டு வீசுவீர்களா? என்று கிம் ஜோங் உன் காத்திருக்கிறார், இந்த குழந்தையிடம் பொருட்கள் இருந்தும் யாரும் விளையாட வருவதில்லை, என்பது வரை கிம் ஜோங் உன் படத்தை வைத்து இணையவாசிகள் பலப்பல மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.

* கவனமாக செயல்படும்...

இதில் உச்சமாக, வடசென்னை பட காட்சியை, சர்வதேச அரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டு ராஜன் பாத்திரத்தை கிம் ஜோங் உன் ஆக காட்டி கிச்சு மூட்டியுள்ளனர்.
சர்வதேச அளவில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் மிக முக்கியமான நாடாக வடகொரியா இருக்கும் நிலையில், அமெரிக்காவை எதிர்த்து வருகிறார் கிம் ஜோங் உன். அதோடு, வலிமையான ராணுவத்தை கட்டமைப்பது, உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்கை ராணுவ வளர்ச்சிக்கு செலவிடுவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ராணுவத்தை மேலும் வலிமைப்படுத்துவது வரை கவனம் செலுத்தி வருகிறார் கிம் ஜோங் உன்.

* வைரல் ஆகும் வீடியோக்கள்

இவை அனைத்தையும் வைத்தே, ‘நீ வேணா சண்டைக்கு வாடா’ என்கிற பாணியில், கிம் ஜோங் உன் காத்திருப்பதாக, அவரை நாயகனாக முன்னிறுத்தி இன்ஸ்டா, எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடங்கி, ரஷ்யா - உக்ரைன், பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் மோதல் வரை பல போர்கள் நடந்து வரும் நிலையில், கிம் ஜோங் உன்-க்கு கொடுக்கப்படும் பில்டப்பும் பொருந்திப் போய் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆக மொத்தம் கிம் ஜோங் உன் ஆட்டத்திற்குள் வந்தால், அவரது எதிரியால் சமாளிக்க முடியாது என்று பலரும் கருத்துக்களை முன்வைத்து வருவது கவனம் ஈர்த்து வருகிறது.

Related Link
யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
1 hr 49 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved