news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடக்கம், வானிலை தகவல்
tv

Also Watch

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடக்கம், வானிலை தகவல்

தென்மாவட்டங்களில் பருவமழை அதிகம்

47

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என வானிலை மையம் கூறி உள்ளது.

வட மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், தென்மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு என்றும், கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

நடப்பாண்டில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 20 சதவீதம் குறைவு என்றும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் குறைவாக மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் கூறி உள்ளது.

தென்மேற்கு பருவமழை குறைவு
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறி இருப்பதாவது;
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை 21 சதவீதம் குறைந்து உள்ளது. தென்மேற்கு பருவமழை 2002ஆம் ஆண்டில், 45 சதவீதம் குறைவாகவும், 2016ல் 16 சதவீதம் குறைவாகவும் இருந்தது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்.

தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், வடமாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பாகவும் வடகிழக்கு பருவமழை இருக்கும்.

சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

28 மாவட்டங்களில்...
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நாளை, அக்டோபர் 16ஆம் தேதி, 28 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.

Related Link

"SIR ஆல்தான் ஸ்டாலின் தோல்வி" என திருமாவளவன் பரபரப்பு பேச்சு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் குறித்த எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved