தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்.சாலை வரி பிரச்சனை தொடர்பாக 21 நாட்கள் நீடித்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது.தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க போராட்டம் வாபஸ் போக்குவரத்து துறை ஆணையருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை மேற்கொண்டதன் அடிப்படையில் முடிவு.21 நாட்களுக்கு பிறகு தமிழகத்திலிருந்து இன்று மாலை 5 மணியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கம். தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையின்போது, கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சென்று தீர்வு காணப்படும் என, போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உறுதி அளித்ததன் அடிப்படையில் வேலை நிறுத்தம் வாபஸ்.வரி செலுத்துவது தொடர்பாக கடந்த 21 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றி தரப்படுவதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.