news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஓணம் திருநாள் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
tv

Also Watch

ஓணம் திருநாள் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

அன்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

ஓணம் திருநாளில், மலையாளச் சொந்தங்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும் மன்னனாகக் கொண்டாடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

முதல்வர் விஜய் வாழ்த்து
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும். அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும். அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இந்த திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறி இருப்பதாவது;
மண்ணும் மனிதரும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவை மீட்டெடுப்பதே ஓணம். பிறப்பால் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர், அனைவருக்குமான சமத்துவமே நம் இலக்காக இருக்கட்டும். மகாபலியைத் தோல்வியுற்றவராக அல்லாமல், செழிப்பையும் மகிழ்ச்சியையும் தந்து மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் மன்னராக நாம் கொண்டாடுவோம். மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம், விவாதம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved