Also Watch
Read this
வாரம் ஒருநாள் வேட்டி, சட்டையில் முதல்வர் விஜய் கோட்டைக்கு வரும் பின்னணி என்ன? என்பதே சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

சமூக வலை தளங்களில்...
’அரசியலுக்கு வருகிறேன்’ என்று கூறியதில் இருந்து, முதலமைச்சர் ஆனது வரைக்கும், ஒவ்வொரு நாளும் சோஷியல் மீடியாவில் டாப் டிரெண்டாகி வருவது முதலமைச்சர் விஜய் தான்.

அவரது நெற்றியில் இருக்கும் திலகம் முதல் கால் ஷூ வரை ஒவ்வொரு பொருளும் கவனம் ஈர்த்து வருகிறது. இதில், முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், அவரது DressCode தான் ஹைலைட்டே.

தேர்தல் பிரச்சாரத்தின் போது...
தவெக கட்சிக் கூட்டத்தின் போதும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் முதலமைச்சர் விஜய் அணிந்து வந்த Beige நிற பேண்ட், வெள்ளை நிற சட்டை, இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால் தான், வாக்களிப்பின் போது கூட இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக விஜயை போல வொயிட் ஷர்ட், பீச் நிற பேண்ட் அணிந்து வந்து வாக்களித்த சம்பங்களும் அரங்கேறின.

கவனம் ஈர்த்த உடை
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் ஆனதும் இதற்கு முன்னால் இருந்த முதல்வர்களைப் போல் இல்லாமல் கருப்பு, வெள்ளை காம்போவில் சூட் போட்டுக்கொண்டு, முதல்வராக பதவி ஏற்றார் விஜய்.

இதுவரை இருந்து வந்த அரசியல் வரலாற்றில் புதிய அடையாளத்தையும் பதிவு செய்தார்.

தொடர்ந்து தலைமை செயலகத்துக்கு தினமும் கோட்-சூட் அணிந்து வரும் முதலமைச்சர் விஜய், தனி கவனத்தையும் பெற்றார். அவரது ஆடை அரசியலும் பெரியதாக விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் பெல்ட், அவரின் நெற்றி திலகம் என ஒவ்வொன்றும் டீகோட் செய்யப்பட்டு வருகிறது.

பட்டு வேட்டி, சட்டையில்...
இதற்கு இடையில், கடந்த மே 29ஆம் தேதி இளமஞ்சள் நிற பட்டு வேட்டி சட்டையில் தலைமை செயலகத்திற்கு, எண்ட்ரி கொடுத்திருந்தார் முதலமைச்சர் விஜய். அன்று காலையில், தனது மேலாளர் வீட்டு விசேஷத்துக்கு பட்டு வேட்டியில் போனதால், அதே அவுட்ஃபிட்டில் தலைமை செயலகத்திற்கும் வந்தார் என்று சொல்லப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 4ஆம் தேதி பனையூரில் தவெக கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கும் பட்டு வேட்டியில் வந்து, கவனத்தை ஈர்த்தார்.

சமூக நீதி விடுதிக்கு...
இந்த நிலையில், எப்போதும் கோட் சூட்டில் தலைமை செயலகத்துக்கு வரும் முதல்வர் விஜய், திடீரென தனது பாணியை மாற்றி, ஜூலை 17ஆம் தேதி பட்டு வேட்டி சட்டையில் வந்து இருந்தார். அதே ஃபார்மில், சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி விடுதிக்கு விசிட் அடித்த முதலமைச்சர் விஜய், மாணவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இதே போல, இந்த மாதம் 9ஆம் தேதியும் வேட்டி சட்டையில் கோட்டைக்கு வந்திருந்தார். இப்படி திடீர் என்று, பட்டு வேட்டி சட்டையில் முதலமைச்சர் விஜய் வருவதற்கு பின்னால் என்ன காரணம் என்பது தான் நெட்டிசன்களோட மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved