news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆன்லைன் டிரேடிங் மோசடி இன்ஸ்டா வீடியோவால் சிக்கல்
tv

Also Watch

ஆன்லைன் டிரேடிங் மோசடி இன்ஸ்டா வீடியோவால் சிக்கல்

கோடியில் உதார்விட்ட மூவர் கைது

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, இளைஞர்களிடம் பல கோடி ரூபாயை வாரி சுருட்டியதாக கூறப்படும் டிரேடிங் மோசடி கும்பலை ஆவடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

டிரேடிங் பயிற்சி என்ற பெயரில் சொகுசு பங்களாக்களில் வகுப்புகள் நடத்தி, இளைஞர்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த மோசடி எவ்வாறு அரங்கேறியது? என்பது பற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

சினிமா பாணியில்...
’சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் ஆசையை தூண்டிவிட்ட மூன்று பேரின் இன்ஸ்டா வீடியோக்கள் தான் பேசுபொருளாகி உள்ளது.

இரண்டே வாரங்களில் 3 லட்சம் ரூபாய் லாபம்
மூன்றே மாதங்களில் 7 லட்சம் ரூபாய் வருமானம்
கோடிக்கணக்கில் பணம் கிடைத்ததாகக் கூறி இளைஞர்கள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் தான், இன்று இந்த மூவரையும் கம்பி எண்ண வைத்திருக்கிறது.

சந்தேக பார்வையில்...
சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆன இந்த வீடியோக்களுக்கு பின்னால், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என பேராசைப்படும் இளைஞர்களை குறிவைத்து மோசடி நடப்பதாக சந்தேக பார்வையை வீசியுள்ளது, ஆவடி மாநகர காவல்துறை.

இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், தீவிர விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார், சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த கவின் பிரசாத், கீர்த்திவாசன், பார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர்.

தலா ரூ.40,000 வசூல்
கடந்த 2022ல் டிரேடிங் நிறுவனம் தொடங்கியதாக கூறப்படும் இந்த கும்பல், Forex Trading மூலம் அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் செய்துள்ளது. Trading Crew என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக பயிற்சி வகுப்புகளுக்கு ஆட்களை சேர்த்த இம்மூவர் கூட்டணி, ஒரு வகுப்பில் 40 பேர் வீதம், 32 வகுப்புகள் நடத்தியதாகவும், ஒவ்வொருவரிடமும் தலா 40 ஆயிரம் ரூபாய் வசூலித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது.

ECR மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நீச்சல் குளம், கிளப் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சொகுசு பங்களாக்களை வாடகைக்கு எடுத்து, வாரக்கணக்கில் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளது இந்த கும்பல்.

ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்களை புதிய வகுப்புகளுக்கு அழைத்து வந்து, குறுகிய காலத்தில் பல லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக பேச வைத்ததுடன், அவர்கள் மூலம் மற்றவர்களையும் முதலீடு செய்ய தூண்டியதாகவும் கூறப்படுகிறது.

செல்போன்கள் பறிமுதல்
இந்த மோசடி தொடர்பாக, அவர்களிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களது வங்கிக் கணக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள சைபர் கிரைம் போலீசார், அங்கீகாரம் இல்லாத இணையதளங்களில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

தொடர் விசாரணை
குறுகிய காலத்தில் பணத்தை சம்பாதித்து அம்பானியாக வேண்டும் என்ற இளைஞர்களின் பேராசையை பயன்படுத்தி, டிரேடிங் பயிற்சி என்ற பெயரில் பணத்தை சுருட்டிய இந்த மோசடி கும்பலிடம், யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்தும் ஆவடி சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
வாழ்க்கையில் ஸ்வீட்டே வேண்டாம், ரூ.70 கோடிக்கு ஆன்லைனில் பீரங்கி ஆர்டர்

வாழ்க்கையில் ஸ்வீட்டே வேண்டாம், ரூ.70 கோடிக்கு ஆன்லைனில் பீரங்கி ஆர்டர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved