Also Watch
Read this
ஈரான் உடனான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகளைப் பதிக்க முயலும் ஈரானியப் படகுகளை கண்டதும் சுட அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கக் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வழித்தடங்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது Truth பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதம் இல்லாமலேயே ஈரான் சிதைக்கப்பட்டது
ஈரானுக்கு எதிரான போரில் தான் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அணு ஆயுதம் இல்லாமலேயே மிக இயல்பான போர் முறைகளைக் கொண்டு ஈரானை தாங்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டதாக கர்வம் தெரிவித்தார்.

இஸ்ரேல்-லெபனான் இடையேயான போர் நிறுத்தம்
இரு தரப்பு மூத்த அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலும் லெபனானும் தங்கள் போர்நிறுத்தத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சில வாரங்களில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நிரந்த அமைதி ஏற்படும் என நம்பிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ தெரிவித்தார்.

ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம்
ஈரானில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு போப் லியோ தற்போது கண்டனம் தெரிவித்ததன் மூலம் போருக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு ரோம் திரும்பும் விமானத்தில் பேசிய போப், திட்டமிடப்பட்ட அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கும் வருத்தம் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved