Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானுடனான ட்ரம்பின் மோதல் போக்கு...!
ஹார்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு, ஈரானுடன் டொனால்ட் ட்ராம்ப் நடத்தி வரும் தொடர் மோதல்களுக்கு இடையே அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஈரான் மீதான அழுத்தத்தை வலுப்படுத்தவும், எண்ணெய் ஏற்றுமதி மூலம் அந்நாடு லாபம் ஈட்டும் திறனைக் கட்டுப்படுத்தவும், ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை :

ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப், "போர்நிறுத்தத்தின் அப்பட்டமான மீறல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார். ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை உலகப் பொருளாதாரத்தை "பிணைக்கைதியாகப் பிடிப்பதற்கு" சமம் என கூறியுள்ளார்.
மீண்டும் போர் தொடங்கினால் கடுமையான தாக்குதல்கள் நடக்கும் :
மீண்டும் போர் தொடங்கினால் எதிரிகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெறும் பெயரளவிலான இந்த போர்நிறுத்தக் காலத்தில் எதிரிகளின் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஏதேனும் அத்துமீறல் நடந்தால் அமெரிக்காவின் எஞ்சியுள்ள சொத்துக்கள் மீதும் பேரழிவுகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடன் பேச்சு எதுவும் நடத்தாமல் போர்நிறுத்தம் நீட்டிப்பு :
அமெரிக்கா - ஈரான் இடையேயான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் 21ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், ஈரானுடன் பேச்சு எதுவும் நடத்தாமல், 'பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்காக, போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமாளித்துள்ளார். ஈரான் அரசு பிளவுபட்டிருப்பதால், அவர்களால் ஒருமித்த முடிவுக்கு வர முடியவில்லை என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகையை மீறிய ஈரான் கப்பல்கள் :

அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகையையும் மீறி, 900 மில்லியன் டாலருக்கு அதிகமான எண்ணெயுடன், 34 ஈரான் சரக்கு கப்பல்கள் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்நிறுத்தத்தை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அரசு திறந்து விட்டது. ஆனால், அதிபர் டிரம்பின் உத்தரவின்படி, அமெரிக்கா ராணுவம் ஈரான் சரக்கு கப்பல்களை வெளியேற விடாமல் முற்றுகையிட்டு வந்தது.