Also Watch
Read this
By: Manigandan Raja

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிலையம் அருகே சினேகா செல்ஷாப் உள்ளது இந்த கடை உரிமையாளர் அரிகிருஷ்ணன் டீ குடிக்க சென்ற நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போன் கடைக்குள் புகுந்து கடையில் உள்ள ஒரு செல்போனை மட்டும் திருடிச் செல்லும் சிசிடிவி காச்சி பதிவாகி உள்ளது.

பதிவானதை கண்ட கடையின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர் யார் என்பது குறித்து வலைவீச்சு தேடி வருகின்றனர்.