news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது
tv

Also Watch

tv

Read this

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

விருதுநகர், சிவகாசி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விருதுநகர்

சிவகாசி சேனைபுரம் காலனியை சேர்ந்த செல்வி என்ற பெண்மணி தனது சகோதரியின் 9 வயது மற்றும் 5 வயதுடடைய இரு பெண் குழந்தைகளுடன் கார்னேஷன் காலனியில் உள்ள
மாநகராட்சி சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர்.

அப்போது அவரது அருகில் விளையாடிக்கொண்டிருந்த நட்சத்திரா என்ற 5 வயது பெண் குழந்தையை மது போதையில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தூக்கிச் சென்று கடத்த
முயன்றுள்ளார்.

அப்போது செல்வி கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து கேட்டறிந்து குழந்தையை கடத்திச் சென்ற வட மாநில இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து குழந்தையை மீட்டதுடன் அவருக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்த முயன்றது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மக்தூள் என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

குழந்தையை கடத்த முயன்ற அசாம் மாநில இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர் பூங்காவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் சிறுமியை வட மாநில இளைஞர் கடத்திய இச்சம்பவம் சிவகாசி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
பிரபல துணிக் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து

பிரபல துணிக் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்யராஜின் உடல் அடக்கம்.. பார்த்திபன் கொடுத்த முக்கிய அறிவிப்பு..!!

0
0 min agoshare
Parthibanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau