news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பட்டுக்கோட்டை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. விவசாயி. இவருக்கு சொந்தமான இடம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கரிக்காடு அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ளது.

இந்நிலையில் அதே அண்ணா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவரும் பக்கத்து இடத்துக்காரருமான கணேசன் என்பவருக்கும் இவருக்கும் இடையே நிலம் சம்பந்தமான பிரச்சனை இருந்து
வந்துள்ளது.

இந்த நிலையில் தனது இடத்தை முறையாக அளந்து தர வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததன் பேரில் அந்த இடத்தை அளப்பதற்கு நேற்று முன்தினம் சர்வேயர் வந்து அளவீடு செய்து கொண்டிருந்த பொழுது அங்கே வந்த கணேசன் மற்றும் சிலர் பிச்சமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்ததாகவும் இதனால் பலத்த காயமடைந்த பிச்சைமுத்து ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே பிச்சை முத்துவை சிலர் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் இது தொடர்பாக பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தன்னை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தனது இடத்தை மீட்டுத் தரவும் வேண்டுமென பிச்சைமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

Related Link
சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள்

சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக்கோப்பை

0
6 mins agoshare
FIFA கால்பந்து உலகக் கோப்பை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau