Also Watch
Read this
By: Manigandan Raja

ஆவடி மார்க்கெட் பகுதியில் பிரபல ஶ்ரீ கிருஷ்ணர் சில்க்ஸ் எனும் பெயரில் துணி கடை இயங்கி வருகிறது.இந்த கடையில் வழக்கம் போல பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஒரு பகுதியில் லேசான கரும்புகை எழுந்துள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட கடை ஊழியர்கள் கடையினுள் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றி உள்ளனர். சிறிது நேரத்தில் கரும்புகையானது தீ பற்றி மளமளவென எரிய துவங்கி உள்ளது.

கொழுந்து விட்டு எறிந்த தீயால் கட்டிடத்தின் ஒரு பகுதி,அருகில் இருந்த சிறு கடைகள் என தீ பரவி எரிய துவங்கியது. பதறி போன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்தில் துணிக்கடையில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.இது குறித்து தீயணைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.