news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள்
tv

Also Watch

tv

Read this

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள்

Strait of Hormuz

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெர்மனி ராஜ்நாத் சிங்

நாடாளுமன்ற தேர்தலில் வென்ற ரூமென் ரடேவுக்கு வாழ்த்து :

பல்கேரிய நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு ரூமென் ரடேவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கும் பல்கேரியாவிற்கும் இடையிலான நட்பு மற்றும் பன்முக உறவுகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் :

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் இந்தியா மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக ஜெர்மனி சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார்.

3 நாள் பயணமாக ஜெர்மனி சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் :

மூன்று நாள் பயணமாக ஜெர்மனி சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அந்நாட்டின் பாதுகாப்புதுறை அமைச்சர் கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் ஜெர்மன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த நிலைக்குழுவிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையும் மேற்கொண்டார்.

விரிவுபடுத்தப்படும் இந்தியா- சீனா விமானசேவை :

சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் தலைநகர் டெல்லி இடையே பல ஆண்டுகளுக்குப்பின் நேரடி விமானசேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாரத்திற்கு மூன்று முறை ஏர் சீனா நிறுவனம் விமானங்களை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி பட்டத்து இளவரசர் - சிரிய அதிபர் சந்திப்பு :

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான்((MOHAMMED BIN SALMAN )), சிரிய அதிபர் அஹ்மத் அல் ஷாரா-வை((AHMED AL-SHARAA)) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்தும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

Related Link
ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள்

ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள்





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்பாரா நேரத்தில் முதல்வரிடம் இருந்து வந்த செய்தி

2
15 mins agoshare
Manickam tagorebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau