Also Watch
Read this
By: Web Team

மறைந்த இயக்குநர் பாக்கியராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் என்னும் ஊரில் கிருஷ்ணசாமி-அமராவதியின் மூன்றாவது மகனாக பிறந்த பாக்கியராஜ், தமிழ்த் திரையுலகின் நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஜாம்பவானாக வலம் வந்தார்.

பாக்கியராஜ், 1977-ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' படத்தில் உதவியாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்குனாரு. இந்த படத்தில் அவரு ஒரு காட்சியிலும் பாக்யராஜ் நடித்திருப்பார். அவரது குரலை வைத்தே பாக்யராஜை பார்க்கலாம்... தொடர்ந்து, பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதோடு, கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் நடிச்சிருந்தாரு. இதன் பின், பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் உணவு விடுதிப் பணியாளராக நடித்தது மட்டுமில்லாமல் அந்த படத்திற்கு வசனமும் எழுதியிருந்தாரு.

இப்படி கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வந்த பாக்யராஜை 'புதிய வார்ப்புகள்' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார் இயக்குநர் பாரதிராஜா. தொடர்ந்து திரைத்துறையில் பல சாதனைகளை செய்த பாக்கியராஜ், இன்று காலை நடைப்பயிற்சி செல்லும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது இந்த இழப்பு திரைத்துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பாக்கியராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலிக்கு பிறகு பாக்கியராஜ் வீட்டில் இருந்து கலங்கிய கண்களுடன் நடிகர் விஜய் வெளியே வந்தார். ஒரு இயக்குநராக மாறி தன்னோட முதல் படமான 'சுவர் இல்லாத சித்திரங்கள்' என்ற படத்தை 1979-ம் ஆண்டு வெளியிட்டார் பாக்யராஜ். அதைத் தொடர்ந்து மௌனகீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, சின்னவீடு, இது நம்ம ஆளு, சொக்கத்தங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிருந்தார். இந்த படங்கள் எல்லாம் இவருக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து, தன்னோட சொந்தத் தயாரிப்பில் 'ஒரு கை ஓசை' திரைப்படத்தை தயாரித்து இருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும், சீரியல்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் என்று கூட இவர சொல்லலாம். இவருக்கு, 'முந்தானை முடிச்சு' படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சைமாவின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றிருந்தார். இப்படி தனது கடின உழைப்பால் மக்கள் மனதில் நீங்கா ஆணி வேராக இடம் பிடித்த பாக்யராஜின் இந்த திடீர் மரண செய்தி திரை வட்டாரம் மட்டும்மல்லாமல் தமிழ் மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.