news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பறந்த பரந்தாமன், ராஜினாமா லெட்டர் ரெடியா? கெத்து காட்டும் ஆதவ்
tv

Also Watch

பறந்த பரந்தாமன், ராஜினாமா லெட்டர் ரெடியா? கெத்து காட்டும் ஆதவ்

எம்ஜிஆர்., ஜெ., வாரிசா முதலமைச்சர் விஜய்?

45

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கி திமுக வெற்றி பெற்றாலும் தனது பொதுச்செயலாளர் பதவியையே ராஜினாமா செய்வதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சவால் விடுக்க, அப்படியென்றால் ராஜினாமா கடிதம் உங்களுக்கு தான் தேவைப்படும் என அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் பரந்தாமனும் பதில் சவால் விடுக்க, தற்போது தவெக வெற்றி பெற்று ஓப்பன் சேலஞ்சை நிறைவேற்றி காட்டி உள்ளது.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வாரிசாக முதலமைச்சர் விஜய்யை தான் அதிமுகவினர் பார்ப்பதாகவும் ஆதவ் அர்ஜூனா அடிக்கடி பேசி வந்த நிலையில் அதற்கு ஏற்றார்போல அதிமுகவின் கோட்டையும் தற்போது தவெக வசமாகி அரசியல் களத்தையே உற்றுநோக்க வைத்துள்ளது.

மதுராந்தகம் இடைத்தேர்தலில்...
மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே வெற்றி நாற்காலியில் பக்குவமாக ஏறியமர்ந்த தவெக அடுத்தடுத்த சுற்றுகளிலும் அந்த நாற்காலியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். இறுதியில் நினைத்ததுபோலவே வெற்றியை தனதாக்கி கொண்டது தவெக.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு விடுத்த சவால் வீடியோவும், அதனை ஏற்றுக் கொள்வதுபோல் அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் பரந்தாமன் பதில் சவால் விடுத்துள்ள வீடியோவும் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதில், பரந்தாமனை நோக்கி, ‘என்னாச்சு என்னாச்சு? சவால் விட்டது என்னாச்சு? ராஜினாமா செய்ய ரெடியாச்சா?’ என தவெகவினர் கமெண்டுகளில் சூழ்ந்துள்ளனர்.

செப்டம்பர் 27ஆம் தேதி...
மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி மாலைவேளையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, எடுத்த எடுப்பிலேயே அந்தப்புற இளவரசர் என உதயநிதியை நக்கலாக அழைத்த ஆதவ், தம்பி முதலில் எங்களுக்கு பதில் சொல்லுங்கள் என வார்த்தையாலேயே அவரை சவாலுக்கு இழுத்தார்.

மதுராந்தகம் தொகுதியில் திமுக ஜெயித்துவிட்டால் பொதுச்செயலாளர் பதவியையே ராஜினாமா செய்து கொள்வதாக உதயநிதிக்கு ஓப்பன் சேலஞ்ச் விட்ட ஆதவ், உங்கள் அப்பா, தாத்தா என யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம் எனவும் கிண்டலடித்தார்.

ஒருவேளை இளவரசர் உதயநிதி தோல்வியடைந்தால் அவர் தனது கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்ய தயாரா? என மீண்டும் எனர்ஜியை ஏற்றிய ஆதவ், தவெகவினர் தான் எளிய வீட்டுப்பிள்ளைகள், ஆனால் திமுகவினர் தான் 70 ஆண்டுகால கட்சியாயிற்றே, கூடவே பணபலமும் உள்ளதே என சீண்டினார். அதுமட்டுமல்லாது, தவெகவைவிட ஒரே ஒரு ஓட்டு மட்டும் கூடுதலாக வாங்கிவிட்டு முதலமைச்சரை சந்திக்க வாருங்கள் எனக்கூறிய ஆதவ், யுத்தத்தில் உங்கள் பிள்ளையை துணிந்து இறக்கி விடுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சவாலுக்கு அழைத்தார்.

‘தம்பி, காலா கோட்டை போன்றுதான் மதுராந்தகம் இனி தவெகவின் கோட்டை, வந்தோமா, பேசினோமா, கிளம்பினோமா என இருக்க வேண்டும், நாங்கள் கண்ணசைத்தால் போதும் வண்டி மதுராந்தகத்தை தாண்டாது’ எனவும் மிரட்டும்தொனியிலும் பேசி இருந்தார். இப்படி சவால், கிண்டல், மிரட்டல் என கலந்துகட்டி களத்திற்கு அழைத்த ஆதவ்வின் பேச்சிற்கு மறுநாளே கூலாக பதிலளித்தார் பரந்தாமன்.

திமுக வேட்பாளர் சவால்
’ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இடைத்தேர்தல் அமையும் என்பதெல்லாம் அறவே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று’ எனக்கூறிய பரந்தாமன் இலை ஆட்சியின்போது நடந்த இடைத்தேர்தலில் உதயசூரியன் உதித்த பழைய வரலாறுகள் எல்லாம் உள்ளது, அப்படிப்பட்ட பழைய வரலாற்றை திரும்பி பார்க்கும் தேர்தலாகதான் இந்த இடைத்தேர்தல் இருக்கும் என கூறியிருந்தார்.

மேலும், அக்டோபர் 9ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வரும்போது பதவியைவிட்டு விலக ஆதவ் அர்ஜுனா தயாராக இருக்க வேண்டும், அதற்கான ராஜினாமா கடிதத்தை தற்போதே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் எனவும் சவால்விட்ட அவர், ’பறக்கப்போவது பரந்தாமனா அல்லது கட்சிவிட்டு கட்சித்தாவும் ஆதர் அர்ஜூனாவா?’ என்பது இன்னும் எண்ணி சிலநாட்களில் தெரியவரும் எனவும் கூறிருந்தார்.

வென்றது தவெக
2 கட்சிகளையும் உரசிப்பார்க்கும் இந்த சவால்களுக்கு மத்தியில்தான் மதுராந்தகத்தின் தவெக வெற்றி பெற்றுள்ளது. அப்படியென்றால் ஆதவ் ராஜினாமா செய்ய வேண்டிய தேவை இல்லாமல்போயிற்று. ஆனால், ராஜினாமா கடிதத்தை ரெடியாக வைத்திருங்கள், பழைய வரலாறு திரும்பும் எனக்கூறிய பரந்தாமனின் வாக்குதான் பொய்த்துப்போய்விட்டது. அதனால் அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இதுஒருபுறமிருக்க, தவெகவில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா, தமிழக சட்டப்பேரவை உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான் என அடிக்கடி ஆதவ் அர்ஜூனா பேசியதுண்டு. அந்த பேச்சு, இந்த இடைத்தேர்தல் மூலம் அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. காரணம், அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டைதான் மதுராந்தகம். ஆனால், இந்த இடைத்தேர்தலில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுக.

எம்ஜிஆர், விஜய்...
மக்கள் தவெகவையும் அதிமுகவையும் ஒன்றாகதான் பார்க்கிறார்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுஉருவமாக முதலமைச்சர் விஜய்யை பார்க்கிறார்கள் என்றும் ஆதவ் பேசி வந்தார். விசிலுக்கு வாக்களிப்பதும் இரட்டை இலைக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இந்த இடைத்தேர்தலிலேயே அதற்காக ரிசல்ட் தெரியும் எனவும் கூறி இருந்தார்.

ஆதவ் பேசியதுபோலவே தற்போது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் வாரிசாகதான் முதலமைச்சர் விஜய்யை நினைத்து தவெகவிற்கு வாக்களித்துள்ளதாக கள நிலவரம் சொல்கிறது. ஆக மொத்தத்தில் ஆதவ் பேசிய ஒவ்வொன்றும் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கிறது என்பது கண்கூடாகவே தெரிகிறது.


Related Link
ஆபாசப் பேச்சும், வன்ம அரசியலும்
திமுகவை தூக்கியெறிந்த மக்கள்

ஆபாசப் பேச்சும், வன்ம அரசியலும் திமுகவை தூக்கியெறிந்த மக்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீதிக்காக ஒலித்த தமிழ்க்குரலுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு

50
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved