Also Watch
Read this
By: Manigandan Raja

பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் ராஜினாமா
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அணியில் தொடர்ச்சியாக வீரர்கள் காயமடைந்து வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மருத்துவக் குழுவில் கமலேஷ் ஜெயின் பணியாற்றி வந்துள்ளார்.
முதல் இந்திய சர்வதேச டார்ட்ஸ் ஓபன் 2026 போட்டி
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில், அகில இந்திய டார்ட்ஸ் சங்கம் சார்பில் முதல் இந்திய சர்வதேச டார்ட்ஸ் ஓபன் 2026 போட்டி நடைபெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

டார்ட்ஸ் உலகளவில் முக்கிய விளையாட்டாக வளர்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் இது ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் என நம்புவதாகவும் சங்கத்தின் தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved