news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிரதமர் மோடி பிறந்த நாள், முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
tv

Also Watch

பிரதமர் மோடி பிறந்த நாள், முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

’நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’

26

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முதல்வர் விஜய் போட்ட முதல் பதிவு

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

வலிமையான இந்தியாவை...
இதுதொடர்பாக, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில், அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.

நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
இன்று 76ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்; நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

வலிமையுடனும் இருக்க வாழ்த்துகிறேன்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறி இருப்பதாவது;
நமது பிரதமர் நரேந்திரமோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமது தீர்க்கமான தலைமைத்துவமும், தேசத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் இந்தியாவின் முன்னேற்றத்தையும் செழிப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துகின்றன. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நமது தேச சேவையில் தொடர்ச்சியான வலிமையுடனும் இருக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Related Link

"பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்" என முதல்வர் விஜய் பதிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் ஒளிரட்டும் என மு.க.ஸ்டாலின் புகழாரம்

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved