news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விட்டுக் கொடுக்கும் பிரதமர் மோடி - ராகுல்
tv

Also Watch

tv

Read this

விட்டுக் கொடுக்கும் பிரதமர் மோடி - ராகுல்

"இந்தியாவின் கொல்லைப்புறத்தில் அமெரிக்கா"

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ragul twitt

இந்தியாவின் கொல்லைப் புறத்திற்கே வந்து, ஈரானிய கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்த போதும், பிரதமர் மோடி, வாய் திறக்காமல் இருப்பதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இக்கட்டான நேரத்தில், உறுதியான முடிவு எடுக்க வேண்டிய சமயத்தில், அனைத்தையும் விட்டுக் கொடுக்கும் பிரதமரை, இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடி உள்ளார்.

பிரதமர் இதுவரை எதையும் கூறவில்லை
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு;
உலகம் தற்போது அதிர்வுகளால் நிரம்பிய ஒரு கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. இந்தியாவின் எண்ணெய் விநியோகம் ஆபத்தில் உள்ளது. நமது இறக்குமதியில் 40%க்கும் மேற்பட்டவை ஹோர்முஸ் நீரிணை வழியாக நடப்பவை. அந்த பாதை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், எல்.பி.ஜி. மற்றும் எல்.என்.ஜி. விநியோகத்தில் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும்.

சமரசம் செய்து கொண்ட பிரதமர்
இந்த மோதல் நம் வீட்டின், நாட்டின் வாசலுக்கே வந்து விட்டது. இந்தியப் பெருங்கடலில் ஒரு ஈரானிய போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் இதுவரை எதையும் கூறவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில், நாட்டை வழி நடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவை. ஆனால், இதற்கு பதிலாக, இந்தியாவின் தன்னாட்சியை ஒப்படைத்து சமரசம் செய்து கொண்ட பிரதமர் தான் நமக்கு உள்ளார்.
இவ்வாறு ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில்...
இலங்கை அருகே இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க் ​கப்​பல் மீது அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் நடத்திய தாக்​குதலில் அதில் இருந்த 87 வீரர்​கள் உயிரிழந்தனர். இந்தக் கப்​பல் இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கடந்த மாதம் நடந்த மிலன்-2026 கூட்​டுப் பயிற்​சி​யில் பங்​கேற்​றது. பயிற்சி முடிந்து ஈரானுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இந்த போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.

வெளியுறவு அமைச்சர் கண்டனம்
இந்த தாக்குதலுக்கு, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி Abbas Araghchi கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவு;
ஈரான் கடற்கரையில் இருந்து சுமார் 2,000 மைல் தொலைவில், அமெரிக்கா ஒரு கொடூரச் செயலை, கடலில் நிகழ்த்தியுள்ளது. இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த டேனா Dena என்ற போர்க்கப்பல், சர்வதேச கடல் பகுதியில் எச்சரிக்கையின்றி தாக்கப்பட்டது. இதில், சுமார் 130 கடற்படையினர் இருந்தனர். என் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள், அமெரிக்கா உருவாக்கிய இந்த முன் உதாரணத்துக்காக அந்த நாடு கடுமையாக வருந்த வேண்டிய நிலை வரும்.
இவ்வாறு சையத் அப்பாஸ் அராக்சி பதிவிட்டுள்ளார்.


Related Link
இந்திய தளங்களை பயன்படுத்தியதா அமெரிக்கா?

இந்திய தளங்களை பயன்படுத்தியதா அமெரிக்கா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 9 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved