Also Watch
Read this
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு நடத்தினர். திருச்சி தென்னூர், சென்னையில் உள்ள வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ரூ.100 கோடி மோசடி புகாரில் ஆய்வு
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 100 கோடி ரூபாய் மோசடி புகாரில் திமுக நிர்வாகி அரசகுமார் சிறையில் உள்ள நிலையில் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

அமைச்சர் மரிய வில்சன் புகார் - ரெய்டு
திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் மீது சட்டப்பேரவையில் லஞ்சப் புகார் கூறியிருந்தார் அமைச்சர் மரிய வில்சன். தனது கல்வி நிறுவன அங்கீகாரத்துக்காக தாமே லஞ்சம் கொடுத்ததாக கூறியிருந்த நிலையில் ரெய்டு நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நேருவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
ரெய்டு நடைபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டிற்கு கே.என்.நேரு வருகை புரிந்தார். ஆனால், வீட்டிற்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், அவர் திரும்பிச் சென்றார்.

திமுகவினரை மிரட்ட முயற்சி
களத்தில் வீரியமாக பணியாற்றும் திமுகவினரை குறி வைத்து மிரட்டுகிறது விஜய் அரசு என்றும், வழக்குகளை எதிர்கொண்டு வீரியமாக திரும்பி வருவோம் என்றும் கே.என்.நேரு கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved