Also Watch
Read this
By: Web Team

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 51 கோடி ரூபாய் பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ வாழ்த்துக்களையும் கூறியுள்ளது.
பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் அசத்திய ஷபாலி வெர்மா
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் கலக்கிய இந்தியாவின் ஷபாலி வெர்மா ஆட்ட நாயகி விருது வென்று அசத்தினார். அதேபோல் அரைசதம் விளாசியதுடன், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்த தீப்தி சர்மாவுக்கு தொடர் நாயகி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதையும் பாருங்கள் - இந்தியாவை ஜொலிக்க வைத்த நாயகிகள்! #deepthi #worldcup2025
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved