news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சச்சின் வீட்டு கல்யாணம் - பிரபலங்கள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

சச்சின் வீட்டு கல்யாணம் - பிரபலங்கள் பங்கேற்பு

மும்பை

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
arjun wedding

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமணம், மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் தொழிலதிபர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து கூறினர்.

கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், ஆல்-ரவுண்டருமான அர்ஜுன் டெண்டுல்கர், தொழிலதிபர் சானியா சந்தோக்கை மும்பையில் நடைபெற்ற கோலாகலமான விழாவில், திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தனக்கென தனி அடையாளம்
அர்ஜுன் டெண்டுல்கரும், சானியா சந்தோக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். உள்நாட்டு கிரிக்கெட் அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் அர்ஜுன், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு டிரேட் ஆகியுள்ளார். கோவா அணிக்காக விளையாடி, திறமையான பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை செதுக்கியுள்ளார். சானியா சந்தோக், புகழ் பெற்ற குடும்ப பின்னணி கொண்ட ஒரு வெற்றிகரமான இளம் தொழிலதிபர். மும்பையின் பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தியான இவர், டெண்டுல்கர் குடும்பத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டவர். நீண்டகாலமாகவே டெண்டுல்கர் குடும்பத்துடன் நெருங்கிய நட்பில் சானியா இருந்து வருகிறார்.

குவிந்த பிரபலங்கள்
இவர்களது திருமண விழாவில், மணமகளின் தந்தை சச்சின் டெண்டுல்கர், மணமக்கள் மீது மலர்களைத் தூவி, புன்னகையுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி, தனது மனைவி சாக்சி உடன் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

அர்ஜுன் சகோதரி சாரா டெண்டுல்கர், சங்கீத் விழாவில் ஆனந்தமாக நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

Related Link
அசுர முன்னேற்றம் கண்ட இந்தியாவின் சஞ்சு சாம்சன்

அசுர முன்னேற்றம் கண்ட இந்தியாவின் சஞ்சு சாம்சன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

0
7 mins agoshare
திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved