Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 10:24 AM
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, டெல்லி சிபிஐ அலுவலகத்தில், செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
வேலுச்சாமிபுரம் துயர சம்பவம்
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 41 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதில் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் என்று, தவெக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை
இதனை பதிவு செய்துகொண்ட அதிகாரிகள், செந்தில் பாலாஜி விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதன் பேரில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அவரிடம் தவெக குற்றச்சாட்டு தொடர்பாகவும், கரூர் துயர சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் சம்பவத்தில்...
* டெல்லி CBI அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்
* கரூர் தவெக கூட்ட நெரிசல் பலி வழக்கு தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜர்
* பரப்புரை கூட்ட நெரிசலுக்கு கரூர் திமுக MLA செந்தில் பாலாஜி தான் காரணம் என தவெக தொடர் புகார்
* இதே வழக்கு தொடர்பாக நேற்று முன் தினம் தவெக தலைவர் விஜய் ஆஜராகி விளக்கமளித்தார்
* விஜய், தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கடந்த ஜனவரி மாதமும் சிபிஐ விசாரித்தது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved