news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெகவுக்கு ஆதரவு, இன்று மாலை 4 மணிக்கு விசிக முடிவு
tv

Also Watch

tv

Read this

தவெகவுக்கு ஆதரவு, இன்று மாலை 4 மணிக்கு விசிக முடிவு

திருமாவளவன் என்ன சொல்வார்?

46

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக, இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்க உள்ளதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

ஆளுநர் அழைக்கவில்லை
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், இதுவரை தமிழக ஆளுநர், தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

விஜய்க்கு ஆதரவு யார் யார்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது ஆதரவு கடிதங்களை கொடுத்து உள்ளது. இந்த ஆதரவுகளை கொடுத்தும் தமிழக ஆளுநர் 118 உறுப்பினர்களுக்கான ஆதரவுக் கடிதங்களை கொடுத்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறிவிட்டார்.

இதுவரை ஆதரவு
தவெக பெரும்பான்மைக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள்
தவெக 107
காங்கிரஸ் 5
சிபிஎம் 2
இந்திய கம்யூனிஸ்ட் 2
தற்போதைய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 116
பெரும்பான்மைக்கு தேவை 118
தேவைப்படும் இடங்கள் 2

திருமாவளவன் என்ன சொல்வார்?
தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு மேலும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். இந்நிலையில் தான் 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது முடிவை அறிவிக்க உள்ளார். தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விஜய், திருமாவளவனிடம் கேட்டு கொண்ட நிலையில், அவர் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்து எடுத்த முடிவை, இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்க உள்ளார்.

Related Link
முதலமைச்சர் பதவியேற்பு எப்போது?

முதலமைச்சர் பதவியேற்பு எப்போது?

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 56 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau