Also Watch
Read this
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆளுநரிடம் இருந்து ஆட்சியமைக்க கடிதம் வராததால் சிக்கல் நீடிக்கிறது.

ஆதரவுக் கடிதங்களுடன்...
எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதங்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநர் அர்லேக்கரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். ஆதரவுக் கடிதங்களை பெற்றுக் கொண்டு சால்வை அணிவித்து விஜயை ஆளுநர் வாழ்த்தினார். நினைவுப்பரிசும் வழங்கினார். ஆனால், ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் மவுனமே நீடித்து வருகிறது.

ராகுல்காந்தி வருகை ரத்து
இன்று மே 9ஆம் தேதி, தமிழ்நாட்டிற்கு வருகை தருவதாக இருந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பதவியேற்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் அந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகை தர இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இன்னும் பதவியேற்பு விழா குறித்து தகவல் எதுவும் உறுதியாகாததால் ராகுல் காந்தியின் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை பிடிக்க இருக்கிறது, முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து இன்று, டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.