Also Watch
Read this
தவெகவுக்கு ஆதரவு அளித்தாலும், திமுக உடன் உறவு தொடரும் என இடதுசாரிகள் அறிவித்துள்ளன.

கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் CPI மற்றும் CPM கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டாக செய்தியாளளை சந்தித்தினர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்கள் வீரபாண்டியன், சண்முகம் கூட்டாக கூறியதாவது;
மக்கள் முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிகிறோம்; மக்கள் தேர்வு செய்த ஒரு அரசு அமைவது அவசியம். தமிழகத்தில் வரும் 10ஆம் தேதிக்குள் ஆட்சி அமையாவிடில் ஆளுநர் ஆட்சி அமைந்துவிடும்.

வெற்றி கிடைக்காததால் ஆதரவு
தவெக தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி அமையக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கவில்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

தவெகவுடன் கூட்டணி இல்லை
தவெகவுக்கு ஆதரவு மட்டும்தான், கூட்டணி இல்லை. ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டில் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் பாஜகவை வீழ்த்தவே தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு, மக்கள் தவெகவிற்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்
மாநில நலன் சாா்ந்த பிரச்சனைகள், ஒத்த கருத்துடைய பிரச்சனைகளில் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம். வருங்காலத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டங்களை திமுகவுடன் முன்னேடுப்போம். தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தாலும் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்.
இவ்வாறு வீரபாண்டியன் மற்றும் சண்முகம் கூறி உள்ளனர்.