news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய ஆட்சி அமைவதற்கு நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

புதிய ஆட்சி அமைவதற்கு நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜனநாயகத்தின் முக்கிய பணி

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சட்டப்பேரவை கலைப்பு
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து ஆளுநர் ஆணையும் பிறப்பித்து விட்டார்.

ஜனநாயகத்தின் முக்கிய பணி
இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி



உடனே நடவடிக்கை
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Link
விஜய்க்கு ஆதரவு - இடதுசாரிகள் கூட்டாக அறிவிப்பு

விஜய்க்கு ஆதரவு - இடதுசாரிகள் கூட்டாக அறிவிப்பு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
7 hrs 9 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau