இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.