Also Watch
Read this
By: Web Team

கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூட்டத்தில்(Rahul Mamkootathil) கட்சியிலிருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல்.
இவர், 'வாட்ஸாப்' செயலி வாயிலாக ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகவும், தனியாக ஹோட்டலுக்கு வரும்படி அழைத்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் மலையாள திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.
ஆனால், ராகுல் பெயரை ரினி ஆன் ஜார்ஜ், வெளிப்படையாக கூறவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர், ராகுல் தான் என, கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதை தொடர்ந்து, மேலும் பல பெண்கள் ராகுலுக்கு எதிராக புகார் கூறினர். இந்த அழுத்தம் காரணமாக, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார்.
'ஆனால், அவர் எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்' என, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன.
இந்நிலையில், ராகுல் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved