news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கோலாகலம்
tv

Also Watch

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கோலாகலம்

இந்த முறை குஜராத்தில் முதன்முறையாக...

48

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, கடந்த 72 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக தலைநகர் டில்லிக்கு வெளியே குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. இன்று செப்டம்பர் 22ஆஆம் தேதி நடைபெற்ற 72ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார்.

சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள...
1954ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, தற்போது 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள ஏக்தா நகருக்கு மாற்றப்பட்டு உள்ளது. 2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த திரைப்படம்
ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் வெளியான 'ஆர்டிகிள் 370' சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை
'ஆர்டிகிள் 370' திரைப்படத்தில் நடித்ததற்காகத் தலைசிறந்த நடிகைக்கான விருதை யாமி கௌதம் வென்றுள்ளார்.

சிறந்த நடிகர்
மலையாளத் படமான 'பிரம்மயுகம்' படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்மூட்டி தனது 4ஆவது தேசிய விருதையும், 'சந்து சேம்பியன்' படத்தில் நடித்ததற்காகக் கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகின்றனர்.

சிறந்த அறிமுக இயக்குநர்
'சுவதந்திரிய வீர் சவர்க்கர்' திரைப்படத்தை இயக்கிய ரன்தீப் ஹூடாவுக்குச் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது வழங்கப்படுகிறது.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்
நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான 'கல்கி 2898 ஏ.டி' சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு திரைப்படம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தேசிய மற்றும் சமூக விழுமியங்களை வலியுறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

சிறந்த நடிகர் தனுஷ்
கேப்டன் மில்லர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு தேசிய விருதை பெற்றார் நடிகர் தனுஷ்.

முதல் முறையாக குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

Related Link
பாடலாசிரியராக இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

பாடலாசிரியராக இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வடகொரியாவிடம் அணுஆயுத ஒழிப்பை வற்புறுத்துவதை நிறுத்துங்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved