news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "வீடியோவில் காட்சி தெளிவாக இல்லை," ரகுபதி அந்த வீடியோவை நேரில் பார்த்தாரா?
tv

Also Watch

"வீடியோவில் காட்சி தெளிவாக இல்லை," ரகுபதி அந்த வீடியோவை நேரில் பார்த்தாரா?

ரகுபதிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரத்தில், போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், வீடியோவில் காட்சி தெளிவாக இல்லை என்பதால் யாருக்கும் உறுதணையாக இல்லாமல் வழக்கை வாபஸ் பெறாமல் காத்திருந்ததாகவும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் நிர்மல் குமார், வீடியோவில் உருவம் மங்கலாக இருக்கிறது என்பதை ரகுபதி எவ்வாறு உறுதியாக சொல்கிறார், அப்படியென்றால் அந்த வீடியோவை அவர் நேரில் பார்த்தாரா? அல்லது திமுகவின் சென்னை பவர் சென்டர்கள் தலையிட்டு வழக்கையே மூடி மறைத்து ஆதாரங்களை அழித்துவிட்டனவா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவுக்கு தொடர்பில்லை...
இதுதொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியதாவது;
ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி குறித்து எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள், நாங்கள் வழக்கை வாபஸ் பெறவில்லை. போதிய ஆதாரம் இல்லை என்பதற்காக காத்திருந்தோம். வழக்கை நாங்கள் நிறுத்தி வைக்கவும் இல்லை. அதில் இருக்கும் வீடியோவில் சரியான காட்சி தெரியவில்லை. இவர்கள் செய்கின்ற வேலையை பார்த்தால் குற்றவாளி தப்பிப்பதற்கான வாய்ப்பு உண்டாகிறது.

இந்த வழக்கில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும், அவருக்கு ஆதரவாக யார் இருந்தாலும் அனைவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக எந்த போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுப்போம். ஒருபோதும் குற்றவாளி தப்பிவிடக் கூடாது. அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நாங்கள் யாருக்கும் உறுதுணையாக இல்லை. வீரமணியிடம் பணம் வாங்கி விட்டு கைது செய்யாமல் இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
இவ்வாறு ரகுபதி கூறி உள்ளார்.

பவர் சென்டர் மூலமாக...
இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருப்பதாவது;
சில விஷயங்களுக்கு, திமுகவினர் ஓவர் ரியாக்ட் செய்கிறார்கள். ஜெம் வீரமணி குறித்து பலரும் பேசுகிறார்கள். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அந்த வீடியோ ஷேடோவாக இருப்பதாக சொல்கிறார்கள். வீடியோ ஷேடோவாக இருப்பது அவர்களுக்கு எப்படி தெரியும்? புதிய ஆதாரம் இல்லை, ஆதாரம் வந்தவுடன் நடவடிக்கை தொடர்கிறோம், என சட்டத்துறை அமைச்சர் எத்தனை வருடம் அப்படி இருந்தார்?

திமுக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இந்த ஒரு விஷயத்திற்கு ரகுபதி பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர் எப்படி வீடியோ ஷேடோவாக இருக்கிறது என்று சொல்கிறார். தொழிலதிபரை விசாரிக்கும் போது, பெரிய பவர் சென்டர் மூலமாக தான் அவர் தப்பிக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார்.

Related Link
அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஜாக்பாட்?

அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஜாக்பாட்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீட்டு மாடிகளில் மின் உற்பத்தி, தமிழகத்தின் சூரியசக்தி மானியத் திட்டம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved