Also Watch
Read this
அமைச்சரவை மாற்றமும், அமைச்சர்களுக்கான இலாகா மாற்றமும் கன்ஃபார்ம்னு சொல்றாங்க, முதல்வர்கிட்ட இருக்கற சில துறைகளையே அவர் கொடுக்கப் போறதாவும் பேச்சிருக்கு. ஒரு சில நாட்கள்ல முக்கியமான அறிவிப்பு வரலாம்னு கோட்டை வட்டாரங்கள் சொல்லுது.

ஒரு சில அமைச்சர்கள் தூக்கப்படலாம்னும், சிலருக்கு அமைச்சர் புரமோஷனும், குறிப்பா ஒரு பெண் அமைச்சரை தூக்குறது உறுதின்னும் சொல்லப்படுற நிலையில தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தபெண் அமைச்சர் பதவியை காப்பாத்திக்க பார்க்க வேண்டியவங்கள பார்த்துக்கிட்டிருக்காராம்.

முதல்வர் விஜய் வசம் இருக்கற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை இப்போதைக்கு அமைச்சர் ராஜ்மோகன் கவனிச்சுக்கிட்டிருந்தாலும், துறை தொடர்பான கோப்புகள்ல முதல்வர்தான் கையெழுத்துப் போடுறது, முடிவெடுக்கறதையெல்லாம் முதல்வரே பார்த்துக்கிட்டாரு. இப்போ முறைப்படி அந்த துறையை ராஜ்மோகன்கிட்டயே கொடுத்து அது அறிவிப்பா வெளிவரப்போகுதாம்.

அதே சமயம் அமைச்சர் ராஜ்மோகன்கிட்ட இருக்கற மற்ற சில துறைகளை வேற அமைச்சர்களுக்கோ, புதுசா நியமிக்கப்படுற அமைச்சர்கள் வசமோ ஒப்படைக்குற முடிவுல இருக்காராம் முதல்வர்.

அமைச்சர்கள் லிஸ்ட்ல இருக்கறவங்களோட பெர்ஃபார்மன்ஸ் மற்றும் அவங்களோட பொதுவாழ்க்கை பத்துன ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை உளவுத்துறை தயார் செஞ்சு முதல்வர் அலுவலகத்துக்கு கொடுத்திருக்காம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved