Also Watch
Read this
By: Web Team

தவெக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ பதிவு, இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
ஆகஸ்ட் 21ஆம் தேதி, மதுரையில் தவெக 2ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகமெங்கும் இருந்து சுமார் 10-15 லட்சம் பேர் வரை பங்கேற்றதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கானவர்கள், மாநாட்டு திடலில் இருந்து, மாநாட்டுக்கு முன்பும் பின்பும் வீடியோ பதிவு எடுத்து வெளியிட்டு வந்தார்கள்.

செல்ஃபி எடுத்த விஜய்;
மாநாட்டு திடலுக்கு, தவெக தலைவர் விஜய் வந்தவுடன் அங்கிருந்த நடைபாதையில் நடந்து, தொண்டர்களிடையே கையசைத்து உற்சாகப்படுத்தினார். அப்போது தனது செல்போனில் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்து கொண்டார்.
இதனை 22ஆம் தேதி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்தார் விஜய். இந்தப் பதிவு மாபெரும் சாதனையை எட்டியிருக்கிறது.
விஜய்யின் செல்ஃபி வீடியோ இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. மேலும் 10 மில்லியன் லைக்குகளையும் பெற்றிருக்கிறது.
இந்தியாவில் அரசியல் சார்ந்த பதிவொன்றுக்கு இவ்வளவு பார்வைகளும், லைக்குகளும் பெற்றிருப்பது விஜய்யின் பதிவுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர் ஒருவரின் பதிவுக்கு இந்தளவுக்கு வரவேற்பு பெற்றிருப்பதும் விஜய்யின் பதிவுக்கு தான் என தொண்டர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved