Also Watch
Read this

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் - கேப் வெட்டே Cape Verde இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை கோல் போட விடாமல் ஆட்டம் காட்டிய குட்டி நாடு, பேசு பொருளாகி உள்ளது.

கடந்த 11ஆம் தேதி முதல்...
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11ஆம் தேதி, கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில், குரூப் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், குரூப்-ஜி மற்றும் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடின. இரண்டு அணிகளுக்கும் முதல் ஆட்டம் சவாலாக அமைந்தது.

ஸ்பெயின் உடன் கேப் வெர்டே பலப்பரீட்சை
இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக ஸ்பெயின் அணி கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்திய நேரப்படி ஜூன் 15ஆம்தேதி இரவு, இந்த தொடரில் முதல் முறையாக விளையாடும் ஆப்பிரிக்க கண்டத்தின் ‘கேப் வெர்டே’ அணி உடன் ஸ்பெயின் அணி பலப்பரீட்சை நடத்தியது. எப்படியும் ஆட்டம் ஒன்-சைடாக இருக்கும், ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தும் என்றெல்லாம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நடந்ததோ அதிர்ச்சி சம்பவம் தான்.

விடா முயற்சி... விஸ்வரூபம்...
அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த போட்டியில், ஸ்பெயின் அணியின் கோல் முயற்சி அனைத்தையும் துல்லியமாக தடுத்தார், கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் வோசின்ஹா. அவருக்கு அணியின் தடுப்பாட்ட வீரர்கள் உதவினர். இதன் மூலம் இப்போது ‘டாக் ஆப் தி வேர்ல்ட்’ ஆக, பேசுபொருளாகி உள்ளார். 40 வயதான வோசின்ஹா. இந்த ஆட்டத்தில் 8.5 என்ற பிளேயர் ரேட்டிங்கை வோசின்ஹா பெற்றார்.

ஒரு கோல் கூட...
இதன் விளைவாக, ஸ்பெயின் அணி ஒரே ஒரு கோல் கூட இந்த ஆட்டத்தில் பதிவு செய்யவில்லை. ஆட்டம் கோல் இன்றி சமனில் முடிந்தது. இந்த சம்பவம் ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக அமைந்தது. நிச்சயம் உருகுவே, சவுதி அரேபியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் மீண்டு வர முயற்சிக்கும் என்று கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved